அம்பாறை நகர சபையின் வரவு செலவுத் திட்டம் ஐ.தே.க ஆதரவுடன் நிறைவேற்றம்

அம்பாறை நகர சபையின் வரவு செலவுத் திட்டம் ஐ.தே.க ஆதரவுடன் நிறைவேற்றம்

எழுத்தாளர் Staff Writer

20 Jul, 2021 | 7:57 pm

Colombo (News 1st) பொதுஜன பெரமுனவின் அதிகாரத்தில் உள்ள அம்பாறை நகர சபையின் வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டதுடன், அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்கியது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆதரவு வழங்கியபோது, கட்சியின் சில உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் இருந்து விலகிக்கொண்டனர்.

கடந்த வருடம் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் அதிகாரத்தில் இருந்த தலைவரை நீக்கி விட்டு புதிய தலைவரை நியமிப்பதற்கு பொதுஜன பெரமுன தீர்மானம் மேற்கொண்டது.

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள நகர சபையின் தலைவருக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆதரவு நல்கினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்