நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 3,009 பேர் கைது 

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 3,009 பேர் கைது 

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 3,009 பேர் கைது 

எழுத்தாளர் Staff Writer

19 Jul, 2021 | 3:44 pm

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3,009 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 17 ஆம் திகதி இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 15,000 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதன்போது,

குற்றம் செய்தவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் 431 பேர்
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 645 பேர்
குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 98 பேர்
போதைப்பொருள் மற்றும் மதுபானம் தொடர்பிலான சம்பவங்களுடன் தொடர்புடைய 1,250 பேர்
துப்பாக்கிகளை வைத்திருந்த ஐவர் மற்றும்
மதுபோதையில் வாகனம் செலுத்திய 580 பேர் என 3,009 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்