அனுமதியின்றி துறைமுகத்திற்குள் நால்வரை அழைத்துச் செல்ல முயற்சித்த சீன பிரஜை கைது

அனுமதியின்றி துறைமுகத்திற்குள் நால்வரை அழைத்துச் செல்ல முயற்சித்த சீன பிரஜை கைது

அனுமதியின்றி துறைமுகத்திற்குள் நால்வரை அழைத்துச் செல்ல முயற்சித்த சீன பிரஜை கைது

எழுத்தாளர் Staff Writer

19 Jul, 2021 | 4:17 pm

Colombo (News 1st) அனுமதியின்றி கொழும்பு துறைமுகத்திற்குள் நால்வரை அழைத்துச் செல்ல முயற்சித்த சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சீன பிரஜை, கொழும்பு துறைமுக நகர அதிவேக வீதி நிர்மாணப் பணிகளுக்கு தொழிலாளர்களை பணிக்கமர்த்தும் நிறுவனமொன்றை நடத்திச் செல்கின்றமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அதற்காக பொத்துவில் பகுதியைச் சேர்ந்த நால்வரை குறித்த சீன பிரஜை அனுமதியின்றி துறைமுகத்திற்குள் அழைத்துச் செல்ல முயன்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்