13 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

13 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2021 | 2:52 pm

Colombo (News 1st) கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெரு பகுதியில் 13 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த தொகை ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட இருவரும் தம்பதியினர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டார்.

இதன்போது கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி சுமார் 13 கோடி ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்