நாட்டில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்  

நாட்டில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்  

by Staff Writer 18-07-2021 | 5:01 PM
Colombo (News 1st) நாட்டை ஊடறுத்து மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டர் வரையில் அதிகரிக்கக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.