by Staff Writer 18-07-2021 | 3:55 PM
Colombo (News 1st) தெஹிவளை மிருகக்காட்சி சாலையிலுள்ள 02 சிம்பன்சி குரங்குகள் (Chimpanzee) மற்றும் 02 ஒரங்குட்டான் (Orangutan) இன குரங்குகளுக்கு COVID - 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த விலங்குகளின் நடத்தைகள் மற்றும் உணவு உட்கொள்ளும் முறைகளில் மாற்றங்கள் ஏதும் இல்லை என வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, குறித்த விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதா என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு மேலும் PCR பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த நான்கு விலங்குகளும் ஏனைய விலங்குகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் ஏற்கனவே இரண்டு சிங்கங்களுக்கு தொற்று ஏற்பட்டிருந்தது.
அவை இரண்டும் தற்போது குணமடைந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க மேலும் கூறியுள்ளார்.