நாட்டில் 2,250 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்று

நாட்டில் 2,250 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்று

நாட்டில் 2,250 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2021 | 3:11 pm

Colombo (News 1st) நாட்டில் இதுவரை 2,250 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 13 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக குடும்ப நல சுகாதாரப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக சிகிச்சை பெறுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு Pfizer மற்றும் Moderna தடுப்பூசிகளை வழங்குவது குறித்து ஆராயுமாறு குடும்ப நல சுகாதார பணியகம், சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

தற்போது கர்ப்பிணித் தாய்மார்களுக்கு Sinopharm தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்