டெங்கு காய்ச்சல் மீண்டும் அதிகரிப்பு

டெங்கு காய்ச்சல் மீண்டும் அதிகரிப்பு

by Staff Writer 17-07-2021 | 3:14 PM
Colombo (News 1st) தென்மேல் பருவப்பெயர்ச்சி மழையுடன் டெங்கு காய்ச்சல் மீண்டும் அதிகரித்துள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 15,160 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். ஜூன் மாதத்திலேயே அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் குறிப்பிட்டார். கடந்த மே மாதத்தில 1,440 பேர் டெங்கு காய்ச்சலுடன் அடையாளங்காணப்பட்ட நிலையில், ஜூன் மாதத்தில் இரு மடங்காக அதிகரித்து 2,997 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்நிலையில், இம்மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,693 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேல் மாகாணத்திலேயே பெரும்பாலானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் மாத்திரம் 7,352 பேர் டெங்கு காய்ச்சலுடன் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதனை தவிர கண்டி, குருநாகல், காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் அதிகமாக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.