தலைமன்னாரிலும் கிண்ணியாவிலும் சடலங்கள் மீட்பு

தலைமன்னாரிலும் கிண்ணியாவிலும் சடலங்கள் மீட்பு

தலைமன்னாரிலும் கிண்ணியாவிலும் சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

17 Jul, 2021 | 3:39 pm

Colombo (News 1st) தலைமன்னார் கடற்பரப்பில் 5 ஆவது தீடை பகுதியில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று (16) மாலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கரையொதுங்கிய சடலம் மிகவும் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், அடையாளங்காண முடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதனிடையே, திருகோணமலை – கிண்ணியா உப்பாற்று பகுதியில் இன்று காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

கரையிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் மீனவர்களின் கட்டுவலையில் சடலம் ஒதுங்கியமை குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சடலம் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர், வில்வெளியை கிராமத்தை சேர்ந்த 42 வயதான வியாபாரி என அடையாளங்காணப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் இரண்டு நாட்களுக்கு முன்னர், தனிப்பட்ட பிரச்சினை காரணமாக வீட்டிலிருந்து வௌியேறியிருந்ததாக பொலிஸ் நிலையத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்