தனிமைப்படுத்தலிலிருந்து மேலும் 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிப்பு

தனிமைப்படுத்தலிலிருந்து மேலும் 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிப்பு

தனிமைப்படுத்தலிலிருந்து மேலும் 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Jul, 2021 | 2:12 pm

Colombo (News 1st) தனிமைப்படுத்தலிலிருந்து மேலும் 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

கேகாலை மாவட்டத்தின் கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிஹிப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவின் மெதய்யாவ கிராமம்,
இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல பொலிஸ் பிரிவின் மாடுவாகல தோட்டத்தின் மேற்பிரிவு ஆகியன இன்று காலை முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவு, கண்டி மாவட்டத்தின் கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுஹம்பொல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின், விகார ஒழுங்கை, விகார வீதி, கப்பர தேவாலய வீதி, வெலிம​டை பாரகம பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், சுதுஹம்பொல கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின், விகார ஒழுங்கை, விகார வீதி, கப்பர தேவாலய வீதி ஆகியனவும் இன்று காலை முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்