அதிக விலையில் அரிசி விற்பனை: 2,500 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

அதிக விலையில் அரிசி விற்பனை: 2,500 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

அதிக விலையில் அரிசி விற்பனை: 2,500 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

17 Jul, 2021 | 3:29 pm

Colombo (News 1st) அதிக விலையில் அரிசி விற்பனை செய்த 2,500 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தமை, விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, கடந்த நாட்களில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

பல்வேறு விலைகளில் அரிசி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோரிடமிருந்து முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்