by Staff Writer 16-07-2021 | 3:34 PM
தனிமைப்படுத்தலில் இருந்து 2 கிராமங்கள் விடுவிப்பு
Colombo (News 1st) தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று (16) காலை 06 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை, நாராந்தனை வடமேல் கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், புத்தளம் - ஜே.பி. வீதியின் 09 ஆம் குறுக்குத்தெருவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி கூறியுள்ளார்.