யாழ், கிளிநொச்சியிலும் டெல்டா; 19 பேருக்கு தொற்று

கிளிநொச்சி, யாழ்ப்பாணத்திற்கும் டெல்டா பரவல்; 19 பேருக்கு தொற்று

by Staff Writer 16-07-2021 | 3:08 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் டெல்டா பிறழ்வு பரவியுள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்டா பிறழ்வு தொற்றுடன் மேலும் 19 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் டெல்டா பிறழ்வு அடையாளங்காணப்பட்டுள்ளது. முதலில் கொழும்பிலேயே புதிய பிறழ்வுடன் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதாக விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், தற்போது வேறு மாவட்டங்களிலும் டெல்டா பிறழ்வுடன் தொற்றாளர்கள் அடையாளங்காணப்படுவதால், மேலும் பல பகுதிகளுக்கு பரவும் அபாயம் நிலவுவதாக அவர் எச்சரித்துள்ளார். இந்த வைரஸானது மிக வேகமாக பரவக்கூடியது என்பதால், நாட்டின் தற்போதைய நிலையில், சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றுவது அவசியம் என விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

ஏனைய செய்திகள்