by Staff Writer 16-07-2021 | 5:48 PM
Colombo (News 1st) புத்தளம் - கற்பிட்டியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் மூவர் காணாமற்போயுள்ளனர்.
கடந்த வௌ்ளிக்கிழமை (09) அதிகாலை மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை என மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கற்பிட்டி - வன்னிமுந்தல் மற்றும் மணல்தோட்டம் பகுதிகளை சேர்ந்த 45, 26 மற்றும் 21 வயதானவர்களே காணாமற்போயுள்ளனர்.
கற்பிட்டி பொலிஸ் நிலையத்திலும் கற்பிட்டி கடற்படை முகாமிலும் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், காணாமற்போனவர்களை தேடும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காணாமற்போன மீனவர்கள் தொடர்பிலான விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.