பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் உயிரிழப்பு 

பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் உயிரிழப்பு 

பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் உயிரிழப்பு 

எழுத்தாளர் Staff Writer

16 Jul, 2021 | 3:49 pm

Colombo (News 1st) பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தங்காபரண கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதார்.

கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண் இன்று காலை திடீர் சுகயீனமடைந்ததாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

பேலியகொடை – துட்டுகெமுன பகுதியை சேர்ந்த 49 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்