ஜெர்மனியில் வௌ்ள அனர்த்தங்களால் 93 பேர் பலி 

ஜெர்மனியில் வௌ்ள அனர்த்தங்களால் 93 பேர் பலி 

ஜெர்மனியில் வௌ்ள அனர்த்தங்களால் 93 பேர் பலி 

எழுத்தாளர் Bella Dalima

16 Jul, 2021 | 5:25 pm

Colombo (News 1st) ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்தினால் 93 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கும் அதிகமானவர்கள் காணாமற்போயுள்ளனர்.

ஜெர்மனியில் பல தசாப்தங்களின் பின்னர் ஏற்படும் பாரிய வௌ்ள அனர்த்தம் இதுவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

​ஐரோப்பாவின் வடமேற்கு பகுதியில் பதிவாகியுள்ள மிக அதிகமான மழை வீழ்ச்சியால், ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து, மோசமான அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

பாரிய வெள்ளத்தினால் பெல்ஜியத்திலும் 12 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதனை தவிர நெதர்லாந்து, லக்ஸம்பேர்க், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜெர்மனியில் Rhineland – Palatinate மற்றும் North Rhine-Westphalia ஆகிய மாநிலங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

மனித செயற்பாடுகளினால் தூண்டப்படும் காலநிலை மாற்றம் இதுபோன்ற மோசமான மழைவீழ்ச்சியை ஏற்படுத்துமென விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், காலநிலை மாற்றத்திற்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கல் அழைப்பு விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்