கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு 

சுகாதார வழிகாட்டல்கள்: கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு 

by Staff Writer 16-07-2021 | 3:17 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக வௌியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல்கள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இது குறித்து சுற்றுநிரூபமொன்று வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்டபத்தின் ஆசன எண்ணிக்கையில் 50 வீதமானோருடன் இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், திறந்த வௌியில் இசை நிகழ்ச்சிகளை நடத்தவோ, கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்தவோ அனுமதி இல்லை. புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, மிருகக்காட்சி சாலைகள் திறக்கப்படவுள்ளன. எனினும், 25 வீதமானோருக்கே அனுமதி வழங்கப்படவுள்ளது. இதனை தவிர, சரணாலயங்களையும் கட்டுப்பாடுகளுடன் திறப்பதற்கு சுகாதார சே​வைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறுவர் பூங்காக்களுக்கும் அனுமதி வழங்கப்படவுள்ளதுடன், விடுதிகளும் திறக்கப்படவுள்ளன. அத்துடன், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, சூதாட்ட நிலையங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. மதவழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டுள்ள போதிலும் அங்கு நடைபெறும் திருவிழாக்கள் அனைத்தும் சுகாதார வழிகாட்டல்களுடனேயே நடைபெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.