38 பேரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட கோரி 15 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல்

38 பேரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட கோரி 15 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல்

38 பேரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட கோரி 15 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2021 | 7:32 pm

Colombo (News 1st) பல்லேகெலே, முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையங்களில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 38 பேரை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 15 ஆட்கொணர்வு மனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டன.

COVID-19 தொற்றுக்குள்ளாகும் நோயாளர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தும் தற்போதைய சூழ்நிலையில், COVID-19 தொற்றுக்குள்ளாகவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர்களை தனிமைப்படுத்தல் விதிகளின் போர்வையில், பலவந்தமாக தடுத்து வைத்திருப்பது உரிய காரணத்திற்காக அன்றி, அரசியல் நோக்கத்திற்காகவா என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொலிஸ்மா அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட தரப்பினர் மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்