15 வயது சிறுமி துஷ்பிரயோகம்: அணிவகுப்பில் இருவர் அடையாளம் காணப்பட்டனர்

15 வயது சிறுமி துஷ்பிரயோகம்: அணிவகுப்பில் இருவர் அடையாளம் காணப்பட்டனர்

15 வயது சிறுமி துஷ்பிரயோகம்: அணிவகுப்பில் இருவர் அடையாளம் காணப்பட்டனர்

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2021 | 5:04 pm

Colombo (News 1st) 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனியார் கப்பல் நிறுவனத்தின் கெப்டனும் உதவி கெப்டனும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் குறித்த சிறுமியால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.

அடையாள அணிவகுப்பை அடுத்து அவர்கள் தொடர்பிலான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம சந்தேகநபர்களை கடும் நிபந்தனைகளுடனான பிணையில் விடுவித்துள்ளார்.

தலா 25,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும் தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் சந்தேகநபர்களை விடுவிப்பதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்தகட்ட விசாரணை அல்லது முறைப்பாட்டின் சாட்சியங்களுக்கு ஏதேனும் அழுத்தம் விடுப்பதாக பதிவானால், வழக்கு விசாரணை முடிவடையும் வரை விளக்கமறியலில் வைக்கப்படுவீர்கள் என சந்தேகநபர்களுக்கு நீதவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்