மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று (15) முதல் தடுப்பூசி

மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று (15) முதல் தடுப்பூசி

மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று (15) முதல் தடுப்பூசி

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2021 | 9:09 am

Colombo (News 1st) மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதலாவது Sinopharm தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (15) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு – விஹாரமகாதேவி பூங்காவின் திறந்தவௌி அரங்கில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதனடிப்படையில், இன்று காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

மேல் மாகாணத்தை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டோர் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்துவதற்காக வருகைதருவோர், மேல் மாகாணத்தில் நிரந்தர வதிவிடத்தை கொண்டமைக்கான அத்தாட்சிகளாக தேசிய அடையாள அட்டையுடன் மின்சார அல்லது தொலைபேசி கட்டணப் பட்டியல் அல்லது வாக்காளர் பட்டியலின் பிரதி அல்லது கிராம அலுவலரால் வழங்கப்பட்ட வதிவிட அத்தாட்சி ஆகியவற்றை சமர்ப்பித்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்