Colombo (News 1st) மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு கிராம சேவகர் பிரிவு இன்று (15) காலை 06 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பொலிஸ் பிரிவின் கீழுள்ள மாமாங்கம் கிராம உத்தியோகத்தர் பிரிவே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.
