மண்சரிவு அபாயம் காரணமாக கினிகத்ஹேனயில் 13 குடும்பங்கள் வௌியேற்றம் 

மண்சரிவு அபாயம் காரணமாக கினிகத்ஹேனயில் 13 குடும்பங்கள் வௌியேற்றம் 

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2021 | 8:28 pm

Colombo (News 1st) மண்சரிவு அபாயம் காரணமாக கினிகத்ஹேன – ரஞ்சுலாவ பிரதேசத்திலுள்ள 13 குடும்பங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ரஞ்சுலாவ – சந்தசிரிகம கிராமத்தில் நிலம் தாழிறங்கியுள்ளதால் மக்கள் குடியிருப்புகளில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்தது.

நிலைமையை கருத்திற்கொண்டு 13 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கிராமத்தை அண்மித்த பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணசரிவு ஏற்பட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்