நாவலப்பிட்டி நகர சபை ஆட்சியைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன

நாவலப்பிட்டி நகர சபை ஆட்சியைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன

நாவலப்பிட்டி நகர சபை ஆட்சியைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2021 | 4:50 pm

Colombo (News 1st) நாவலப்பிட்டி நகர சபையின் ஆட்சியை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளது.

நாவலப்பிட்டி நகர சபையின் தலைவராக செயற்பட்ட சசங்க சம்பத் சஞ்ஜீவவை தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கி, அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது.

இதனையடுத்து, வெற்றிடமான தலைவர் பதவிக்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், பொதுஜன பெரமுன ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அமல் பிரியங்கர 2 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.

சுயேட்சைக் குழு உறுப்பினரும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும் புதிய தலைவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மேனகா ஹேரத் தலைமையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்