தடுப்பூசி திட்டத்திற்கு இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் ஒத்துழைப்பு வழங்கும்: பிரதிநிதி அலகா சிங்

தடுப்பூசி திட்டத்திற்கு இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் ஒத்துழைப்பு வழங்கும்: பிரதிநிதி அலகா சிங்

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2021 | 8:23 pm

Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்வைத்துள்ள COVID தடுப்பூசி திட்டம் நடைமுறை சாத்தியமானது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை பிரதிநிதி அலகா சிங் (Alaka Singh) தெரிவித்தார்.

தடுப்பூசி ஏற்றும் இலக்கை இலங்கை அரசாங்கம் அடைவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அலகா சிங் குறிப்பிட்டார்.

கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை கண்காணித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களுக்கு Sinopharm தடுப்பூசி ஏற்றும் திட்டம் குறித்த மத்திய நிலையத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

காலை 8.30-இலிருந்து பிற்பகல் 4.30 வரை விஹாரமகாதேவி பூங்காவில் தடுப்பூசி ஏற்றப்படுவதாக இராணுவம் தெரிவித்தது.

மேல் மாகாணத்தை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட எந்த ஒருவரும் இந்த மத்திய நிலையத்தில் Sinopharm தடுப்பூசியின் முதல் டோஸை ஏற்றிக்கொள்ள முடியும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்