7 மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்கள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமனம்

7 மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்கள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமனம்

7 மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்கள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமனம்

எழுத்தாளர் Staff Writer

14 Jul, 2021 | 8:03 pm

Colombo (News 1st) சட்டமா அதிபர் திணைக்களத்தின் 7 மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்களான மிலிந்த குணதிலக்க, ஹரிப்ரியா ஜயசுந்தர, விக்கும் ஆப்ரு, ஷானக்க விஜேசிங்க, ரவிந்திர பத்திரனகே, நெரின் புள்ளே மற்றும் சேதிய குணதிலக்க ஆகியோர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்கள் எதிர்வரும் நாட்களில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதுடன், இந்த நியமனங்கள் தொடர்பிலான ஆவணங்களை ஜனாதிபதியின் சட்டப் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஹரிகுப்தா ரோஹனவீர உயர் நீதிமன்ற பதிவாளரிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்