மஹிந்தானந்த அளுத்கமகேயும் ஷஷீந்திர ராஜபக்ஸவும் உர நிறுவனங்களுக்கு திடீர் கண்காணிப்பு விஜயம்

மஹிந்தானந்த அளுத்கமகேயும் ஷஷீந்திர ராஜபக்ஸவும் உர நிறுவனங்களுக்கு திடீர் கண்காணிப்பு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

14 Jul, 2021 | 4:43 pm

Colombo (News 1st) விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயும் விவசாய இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஸவும் இரண்டு உர நிறுவனங்களுக்கு இன்று திடீர் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர்.

பேலியகொடையிலும் களனியிலும் உள்ள இரண்டு உர நிறுவனங்களுக்கே அமைச்சர்கள் சென்றிருந்தனர்.

உர விநியோகம் உரிய வகையில் இடம்பெறுகின்றதா என்பது குறித்து ஆராய்வதற்கே திடீர் விஜயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும், உரிய வகையில் உர விநியோகம் முன்னெடுக்கப்படாமை குறித்து இதன்போது கண்டறியப்பட்டுள்ளது.

உர விநியோகம் தாமதமாகியுள்ளமை குறித்து விவசாய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், உடனடியாக உர விநியோகத்தை முன்னெடுக்குமாறு இதன்போது அமைச்சர் அறிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்குள் உரிய வகையில் உர விநியோகம் முன்னெடுக்கப்படாவிடின், உடனடியாக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள உரத்தை அரச உர செயலகத்திற்கு கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு இதன்போது அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்