மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து உயர் நீதிமன்றில் 3 மனுக்கள் தாக்கல்

மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து உயர் நீதிமன்றில் 3 மனுக்கள் தாக்கல்

மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து உயர் நீதிமன்றில் 3 மனுக்கள் தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

14 Jul, 2021 | 8:28 pm

Colombo (News 1st) ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுமக்களின் பேரணிகளை இடைநிறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கடந்த 06 ஆம் திகதி விடுத்த ஊடக அறிக்கை ஊடாக நாட்டு மக்களின் பேச்சு மற்றும் வௌிப்பாட்டு சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ உள்ளிட்ட தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் இன்று மூன்று அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், பொலிஸ்மா அதிபர், சுகாதார அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்குடன் முன்கூட்டி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சரால் விடுக்கப்பட்ட சகல அறிக்கைகளையும் வர்த்தமானி அறிவித்தல்களையும் நீதிமன்றத்தின் முன்பாக கொணர்ந்து அது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்துமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்