பொலிஸார் என கூறி பண மோசடி: மூவர் கைது

பொலிஸார் என கூறி பண மோசடி: மூவர் கைது

பொலிஸார் என கூறி பண மோசடி: மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

14 Jul, 2021 | 12:40 pm

Colombo (News 1st) பொலிஸ் அதிகாரிகள் என்ற போர்வையில் மக்களிடம் பண மோசடி செய்த மூவர் வத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநாகல் மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சந்தேகநபர் ஒருவரிடமிருந்து பொலிஸ் உத்தியோகத்தரின் அடையாள அட்டையை போன்ற போலி அடையாள அட்டையொன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் குறித்த போலி அடையாள அட்டையை மக்களிடம் காண்பித்து அச்சுறுத்தல் விடுப்பதுடன், சன நெரிசல் குறைந்த பகுதியில் வைத்து அவர்களின் தங்காபரணங்களை கொள்ளையிட்டுள்ளனர்.

இவ்வாறான 17 கொள்ளைச் சம்பவங்களுடன சந்தேகநபர்கள் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தளை, கொழும்பு – முகத்துவாரம் மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளில் இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

சந்தேகநபர்களிடமிருந்து 40 கிராம் தங்கம், 2 மோட்டார்சைக்கிள்கள், 2 கைவிலங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்