தொழிற்சங்கத் தலைவர்களை விடுவிக்கக் கோரி எதிர்ப்பு வாகன பேரணி

தொழிற்சங்கத் தலைவர்களை விடுவிக்கக் கோரி எதிர்ப்பு வாகன பேரணி

தொழிற்சங்கத் தலைவர்களை விடுவிக்கக் கோரி எதிர்ப்பு வாகன பேரணி

எழுத்தாளர் Staff Writer

14 Jul, 2021 | 2:58 pm

Colombo (News 1st) ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கொழும்பு – தாமரைத் தடாகத்திற்கு அருகில் இருந்து எதிர்ப்பு வாகன பேரணியை ஆரம்பித்துள்ளன.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள தொழிற்சங்கத் தலைவர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், அரச தாதியர் சங்கம், இலங்கை வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தாமரைத் தடாகத்திற்கு அருகில் இருந்து வாகனங்களில் பதாகைகளை காட்சிப்படுத்தி எதிர்ப்பு வாகன பேரணியை முன்னெடுத்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்