திருகோணமலையின் சில பகுதிகளில் நாளை (15) நீர்வெட்டு

திருகோணமலையின் சில பகுதிகளில் நாளை (15) நீர்வெட்டு

திருகோணமலையின் சில பகுதிகளில் நாளை (15) நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

14 Jul, 2021 | 5:50 pm

Colombo (News 1st) திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (15) வியாழக்கிழமை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, கிண்ணியா, தம்பலகாமம், திருகோணமலை நகர், நிலாவெளி, ஆண்டாங்குளம், பாலையூற்று ,சீனக்குடா ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

திருகோணமலை – கண்டி பிரதான வீதி, முள்ளிப்பொத்தானை பகுதியில் உள்ள பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவினால் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்