சீன கடலட்டை பண்ணைக்கு கடற்றொழில் அமைச்சர் கள விஜயம்

சீன கடலட்டை பண்ணைக்கு கடற்றொழில் அமைச்சர் கள விஜயம்

எழுத்தாளர் Staff Writer

14 Jul, 2021 | 8:21 pm

Colombo (News 1st) கிளிநொச்சி – கெளதாரிமுனை பகுதியில் சீன நிறுவனமொன்றினால் நடத்தப்பட்டு வரும் அட்டை பண்ணை தொடர்பாக ஆராய்வதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று காலை அங்கு சென்றிருந்தார்.

கிளிநொச்சி – மண்ணித்தலை இறங்குதுறையிலிருந்து படகு மூலம் அமைச்சர் குறித்த அட்டை பண்ணையை பார்வையிடுவதற்காக சென்றிருந்தார்.

தேசிய கடல்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாண பணிப்பாளர், கடற்றொழில் நீரியல் வள திணைக்கள கிளிநொச்சி மாவட்ட உதவி பணிப்பாளர் உள்ளிட்டவர்களும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

அட்டை பண்ணையை பார்வையிட்டதன் பின்னர் மண்ணித்தலை இறங்குதுறையில் மீனவர்களுடனும் அதிகாரிகளுடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்