இன்று (14) தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்ட பிரதேசங்கள்

இன்று (14) தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்ட பிரதேசங்கள்

இன்று (14) தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்ட பிரதேசங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

14 Jul, 2021 | 7:10 am

Colombo (News 1st) ஒன்பது மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள் இன்று (14) காலை 06 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதனடிப்படையில், யாழ். மாவட்டத்தின் மானிப்பாய் பொலிஸ் பிரிவின் கீழுள்ள சாவட்கட்டு J/131 கிராம சேவகர் பிரிவு விடுவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று யாழ். மாவட்டத்தின் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரெக்லமேஷன் மேற்கு J 69 மற்றும் குருநகர் மேற்கு J 71 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தின் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவின் கீழுள்ள காரைநகர் கிராம உத்தியோகத்தர் பிரிவின் கள்ளித்தேரு மற்றும் கல்வந்தாழ்வு பிரதேசங்கள் ஆகியன விடுவிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவின் புதிய காத்தான்குடி வடக்கு, புதிய காத்தான்குடி தெற்கு, கரபலா வீதி, ALS மாவத்தை, நூரனியா மயான வீதி ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குபட்ட பிரைந்துறைச்சேனை முதலாம் குறுக்குத் தெரு மற்றும் பிரைந்துறைச்சேனை 2 ஆம் குறுக்குத் தெரு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.

அதேநேரம், பதுளை மாவட்டத்தின் வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹூலங்கபொல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் கினிகத்ஹேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரோலினா தோட்டத்தின் கடவள தோட்டப்பிரிவு மற்றும் கொத்மலை பொலிஸ் பிரிவின் பெரமன தெற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தின் களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்பொரள்ள 100 தோட்டமும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இவைதவிர, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்