ஏப்ரல் 21 தாக்குல்: நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி கொழும்பு பேராயர் ஜனாதிபதிக்கு கடிதம்

by Staff Writer 13-07-2021 | 7:45 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குல் தொடர்பில் நீதி வழங்கும் செயற்பாடு திருப்தியளிக்கக்கூடிய வகையில் வௌிப்படைத்தன்மையுடன் இடம்பெறாவிட்டால், அதற்கான மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டி ஏற்படும் என கொழும்பு பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான தேசிய கத்தோலிக்க பேச்சாளர் குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது. கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு ஒரு மாதத்திற்குள் திருப்தியளிக்கக்கூடிய வகையில் பதில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என தாம் நம்புவதாக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு பேராயருடன் ஐந்து ஆயர்கள், உதவி ஆயர்கள் உள்ளிட்ட 34 பேர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர். ஜனாதிபதி ஆணைக்குழுவின் சிபாரிசு, சாட்சியங்களில் வௌியான தகவல்கள் மற்றும் பாராளுமன்றத்திற்குள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆற்றிய உரை உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, ஏப்ரல் 21 தாக்குல் தொடர்பில் இதுவரை வௌியாகாத பல விடயங்களை சுட்டிக்காட்டி இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.