Colombo (News 1st) மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவின் மஞ்சஞ்தொடுவாய் வடக்கு கிராம சேவகர் பிரிவு மற்றும் மஞ்சஞ்தொடுவாய் தெற்கு கிராம சேவகர் பிரிவின் ஜின்னா வீதி ஆகிய பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெந்தலை வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஓலந்த கிராமம் மற்றும் றப்பர் தோட்டம் ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ பொலிஸ் பிரிவின் சிங்கபுர கிராம உத்தியோகத்தர் பிரிவில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.