நாளை (14) முதல் மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட பஸ் சேவை

நாளை (14) முதல் மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட பஸ் சேவை

நாளை (14) முதல் மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட பஸ் சேவை

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2021 | 10:12 am

Colombo (News 1st) மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை (14) முதல் பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதற்கு COVID – 19 ஒழிப்பு தேசிய செயலணியின் அனுமதி கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதனடிப்படையில், அரச மற்றும் தனியார் பிரிவுகளில் அத்தியாவசிய சேவை நிமித்தம் செல்பவர்கள் மாத்திரமே இவற்றில் பயணிக்க முடியும் என கூறினார்.

அதேநேரம் பயணிகள், அரச அல்லது தனியார் நிறுவனங்களின் அடையாள அட்டை அல்லது தாம் செல்லும் பணி தொடர்பிலான ஆவணத்தை வைத்திருக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்