நாட்டில் 24 பேருக்கு டெல்டா கொரோனா பிறழ்வு தொற்று உறுதி

நாட்டில் 24 பேருக்கு டெல்டா கொரோனா பிறழ்வு தொற்று உறுதி

நாட்டில் 24 பேருக்கு டெல்டா கொரோனா பிறழ்வு தொற்று உறுதி

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2021 | 9:09 am

Colombo (News 1st) நாட்டில் டெல்டா கொரோனா பிறழ்வு தொற்றுக்குள்ளான 24 நோயாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு பொதுமக்கள் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில், நாட்டில் டெல்டா கொரோனா வைரஸ் பிறழ்வு பரவியுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக மற்றுமொரு ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் 96 உயிரி மாதிரிகளை கொண்டு இந்த ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இந்த மாதிரிகள் எழுமாறாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுகளின் முடிவுகளை இன்னும் ஒரு வாரத்தில் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்