நடிகர் விஜய்க்கு 1 இலட்சம் ரூபா அபராதம்

நடிகர் விஜய்க்கு 1 இலட்சம் ரூபா அபராதம்

நடிகர் விஜய்க்கு 1 இலட்சம் ரூபா அபராதம்

எழுத்தாளர் Bella Dalima

13 Jul, 2021 | 3:01 pm

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 1 இலட்சம் ரூபா அபராதத்தை 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிமன்றம், நடிகர் விஜய்க்கு 1 இலட்சம் ரூபா அபராதம் விதித்தது.

சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர்கள் உண்மையான கதாநாயகர்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்