சிசுவை எரியூட்டிக் கொன்ற தாய் கைது: திருகோணமலையில் சம்பவம்

சிசுவை எரியூட்டிக் கொன்ற தாய் கைது: திருகோணமலையில் சம்பவம்

சிசுவை எரியூட்டிக் கொன்ற தாய் கைது: திருகோணமலையில் சம்பவம்

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2021 | 2:43 pm

Colombo (News 1st) திருகோணமலை – கந்தளாய், பேராறு முதலாம் காலனியில் தாயொருவர் தனது குழந்தையை எரியூட்டி கொலை செய்துள்ளார்.

நேற்று (12) மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பிறந்த உடனேயே போர்வையில் சுற்றப்பட்டு சிசு எரியூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

எனினும், குழந்தையை பிரசவித்த பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாட்டில் தொழிலுக்கு சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

35 வயதான குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸ் காவலில் கந்தளாய் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்