கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையம் அமெரிக்கா வசமாகும்: அநுரகுமார எச்சரிக்கை

கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையம் அமெரிக்கா வசமாகும்: அநுரகுமார எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2021 | 6:36 pm

Colombo (News 1st) கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தில் அரசுக்கு சொந்தமான 40 வீதமான பகுதியை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பிற்கும், பொருளாதாரத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அமைச்சரவை பத்திரத்திற்கு கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, அமெரிக்க நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தின் குழாய் கட்டமைப்பு, அதற்கான வாயு விநியோகம், களஞ்சியசாலை தொகுதி ஆகியவற்றை முழுமையாக ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனமொன்றிடம் கையளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அநுரகுமார திசாநாயக்க கூறினார்.

எரிசக்தி வளத்தை கைப்பற்றுவோரே எதிர்காலத்தில் எமது நாட்டை ஆள முடியும். இந்நிலையில், திறைசேரி உள்ளிட்ட நான்கு அரச நிறுவனங்களுக்கு உட்பட்ட கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீதத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு கையளிக்க அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இந்த மின்னுற்பத்தி நிலையத்தை அண்மித்து 300 மெகாவாட் LNG மின்னுற்பத்தியை மேற்கொள்வதற்கான நிலையம் நிர்மாணிக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டளவில் இங்கு 1000 மெகாவாட் மின்னுற்பத்தியை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது

என அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்