103 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தொகையுடன் மூவர் கைது

103 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தொகையுடன் மூவர் கைது

103 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தொகையுடன் மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

12 Jul, 2021 | 2:11 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – அனலைதீவு கடற்பகுதியில் 103 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (12) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது 11 பொலித்தின் பைகளில் பொதியிடப்பட்ட 344 கிலோ 550 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்தது.

யாழ்ப்பாணம் – அனலைதீவு கடற்பகுதியில் சந்தேகநபர்கள் பயணித்த டிங்கி படகை சோதனைக்குட்படுத்திய சந்தர்ப்பத்தில் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சர்வதேச கடற்பரப்பில் வைத்து கடத்தற்காரர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட கஞ்சாவை, சந்தேகநபர்கள் கரைக்கு கொண்டுவர முயற்சித்திருக்கலாம் என கடற்படை சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

நாச்சிக்குடா, மன்னார், யாழ். குறுநகர் பகுதிகளைச் சேர்ந்த 34 முதல் 38 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் டிங்கி படகுடன் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்