by Staff Writer 12-07-2021 | 2:00 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 41,000 பேருக்கு எதிராக இதுவரை வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் 8,000 பேருக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் நீதிமன்றத்தினால் 10,000 ரூபா அபராதமும் 06 மாத கால சிறைத்தண்டனையும் விதிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.