கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்துவதன் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்துவதன் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

12 Jul, 2021 | 8:03 pm

Colombo (News 1st) கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்துவதன் இரண்டாவது கட்டம் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமானது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது.

இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்குச் சந்தை, இலங்கையின் மூலதன சந்தையை டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கையின் முதல்கட்ட நடவடிக்கை கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பமாகியது.

65,000 இற்கும் மேற்பட்ட புதிய முதலீட்டாளர்களுடன் 17,000 புதிய மத்திய வைப்பு கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன என பங்குச் சந்தை அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

டிஜிட்டல் மயப்படுத்துவதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு எந்தவொரு இடத்திலிருந்தும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட முடியும் என்பதுடன், மாதாந்த அறிக்கைகளை பெற்றுக் கொள்ளுதல், தகவல்களைப் பரிமாறுதல், தகவல்களை மாற்றுதல் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கான கணக்குகளைத் திறப்பதற்கான சந்தர்ப்பமும் இதன்மூலம் உருவாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்