மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பேச்சு

X-Press Pearl கப்பலில் தீ; மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பிலான தீர்மானம் இன்று

by Staff Writer 11-07-2021 | 2:38 PM
Colombo (News 1st) X-Press Pearl கப்பல் விபத்துக்குள்ளானதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் இன்று (11) மாலை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. குறித்த கப்பல் நிறுவனத்திடமிருந்து கிடைத்த 720 மில்லியன் ரூபா இடைக்கால இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்குவதற்கு இங்கு இணக்கம் காணப்படவுள்ளது. X-Press Pearl கப்பல் தீ விபத்துக்குள்ளானதால், மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலுள்ள மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 10,000 மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.