விசேட பிரிவை ஸ்தாபிக்க தீர்மானம்

கப்பம் பெறுதல்,போதைப்பொருள் சுற்றிவளைப்பிற்கு பொலிஸ் விசேட பிரிவு

by Staff Writer 11-07-2021 | 2:52 PM
Colombo (News 1st) நாட்டில் இடம்பெறும் கப்பம் பெறும் சம்பவங்கள், போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்கள், சிறுவர் மற்றும் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்கள் தொடர்பில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பொலிஸாருக்கு அறிவிக்கப்படாத கப்பம் பெறும் சம்பவங்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், தென் பிராந்தியம் போதைப்பொருளுக்கான கேந்திர நிலையமாக மாறியுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறான விடயங்களை கருத்திற்கொண்டு, குறித்த குற்றங்களில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கான விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவ்வாறான குற்றச்செயல்கள் குறித்து அறிவிப்பதற்கு துரித தொலைபேசி இலக்கமொன்றையும் அறிவிக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்