by Staff Writer 10-07-2021 | 8:32 PM
Colombo (News 1st) திஸ்ஸமஹாராம வாவியில் மணல் மற்றும் சேற்றை அகற்றுவதற்கு எதிர்வரும் திங்கட்கிழமை (12) எழுத்துமூல அனுமதி வழங்கப்படும் என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த பகுதியில் மேற்கொண்ட கள விஜயத்தின் போது, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க இதனை தெரிவித்தார்.
இந்த கள விஜயத்தின் போது, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளரால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவின் உறுப்பினர்களும் சென்றிருந்தனர்.
1500 வருட வரலாற்றைக் கொண்ட திஸ்ஸமஹாராம வாவியில் மணல் அகழ்விற்கு பயன்படுத்தப்படுகின்ற இயந்திரம் உண்மையிலேயே மணல் மற்றும் சேற்றை அகற்றுவதற்கு பயன்படுத்தப்படும் ஒன்றா, இல்லையெனில் பெறுமதிவாய்ந்த பொருளைத் தேடும் ஓர் இயந்திரமா எனும் சந்தேகம் எழுகின்றது.