தனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

தனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

தனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2021 | 2:16 pm

Colombo (News 1st) கேகாலை மாவட்டத்தின் கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலவிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவின் கோலின்தவத்த 3 ஆம் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, 4 மாவட்டங்களின் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், புத்தளம் மாவட்டத்தின் மாதம்பை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரக்கலகம கிராம உத்தியோகத்தர் பிரிவும் ஆராச்சிக்கட்டு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருக்குபன கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

மாத்தறை மாவட்டத்தின் வெலிகம பொலிஸ் பிரிவின் பலேன தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவும், யாழ் மாவட்டத்தின் கரவெட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் கிராம உத்தியோகத்தர் பிரிவும், தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுள்ளன.

களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பொலிஸ் பிரிவிற்குட்ட யட்டதொல கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் அம்பதென்ன வத்த – க்ளே பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்