3 அமைச்சுகள், 4 இராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்களுக்கு தெரிவுக்குழு அனுமதி

3 அமைச்சுகள், 4 இராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்களுக்கு தெரிவுக்குழு அனுமதி

3 அமைச்சுகள், 4 இராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்களுக்கு தெரிவுக்குழு அனுமதி

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2021 | 5:27 pm

Colombo (News 1st) அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சுகள், நான்கு இராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்களுக்கு பாராளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பான தெரிவுக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.

பாராளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பான தெரிவுக்குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நேற்று கூடியபோது இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நிதி அமைச்சின் செயலாளராக S.R. ஆட்டிகல, புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் G.H.K.K. குணவர்தன, கைத்தொழில் அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க ஆகியோருக்கு பாராளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பான தெரிவுக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.

அத்துடன், ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் COVID நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் சுனேத்ரா குணவர்தன, வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் S.அருமைநாயகம், கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் K.D.S.ருவன்சந்திர, தென்னை, கித்துல் மற்றும் பனை செய்கை மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவா வித்தாரண ஆகியோருக்கும் பாராளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பான தெரிவுக்குழு அங்கீகாரம் அளித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்