தனிமைப்படுத்தல் விதிகள் மூலம் ஆர்ப்பாட்டத்தை தடுப்பது அடிப்படை உரிமை மீறல்: ஐக்கிய மக்கள் சக்தி மனுத்தாக்கல்

by Staff Writer 09-07-2021 | 3:01 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் விதிகளை பயன்படுத்தி, ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்கு பொலிஸார் முயற்சிப்பதனூடாக அடிப்படை உரிமை மறுக்கப்படுவதாக உத்தரவிடக் கோரி, ஐக்கிய மக்கள் சக்தியினரால் உயர் நீதிமன்றத்தில் மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன ராஜகருணா மற்றும் மயந்த திசாநாயக்க ஆகியோரால் இந்த மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பொலிஸ்மா அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சுகாதார அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை தனிமைப்படுத்தல் விதிமுறைகளின் போர்வையில், கைது செய்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவது, இலங்கை அரசியலமைப்பினூடாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை முற்றாக மீறும் செயல் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதிவாதிகளை மன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து விசாரணை நடத்துமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

ஏனைய செய்திகள்