உயர்தர பரீட்சை தொடர்பில் இருவேறு நிலைப்பாடுகள்

க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் இருவேறு நிலைப்பாடுகள்

by Staff Writer 09-07-2021 | 7:34 PM
Colombo (News 1st) கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் தெரிவித்தார். எனினும், இந்த விடயம் குறித்து இரண்டு நிலைப்பாடுகள் காணப்படுவதாக அவர் கூறினார். இம்முறை சுமார் 2 இலட்சம் மாணவர்கள், முதல் தடவையாக பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன், தமக்கான பாடவிதானங்கள் உரிய முறையில் நிறைவு செய்யப்படாததால் பரீட்சையை பிற்போடுமாறு கோரியுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, இரண்டாவது தடவையாக உயர் தர பரீட்சையில் தோற்றும் சுமார் 1,50,000 மாணவர்கள், பரீட்சையை பிற்போட வேண்டாம் என கோரியுள்ளதால், இந்த விடயம் குறித்து நியாயமான தீர்மானமொன்றை எடுக்க வேண்டியுள்ளதாகவும் பேராசிரியர் G.L.பீரிஸ் சுட்டிக்காட்னார். 100 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகளை ஆகஸ்ட் மாதத்தில் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.