லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவும் அபாயம் 

 லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவும் அபாயம் 

 லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவும் அபாயம் 

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2021 | 2:14 pm

Colombo (News 1st) வௌிநாடுகளில் சடுதியாக பரவி வரும்  லம்ப்டா (Lambda)  கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.

லம்ப்டா வைரஸ் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு மிகுந்த அவதானத்துடன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த வைரஸ் பிறழ்விற்கான மாதிரிகளை தொடர்ந்தும் பரிசோதித்து வருவதாகவும் அவர் கூறினார்.

லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு நாட்டிற்குள் பரவாதிருப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  தெரிவித்தார்.

நாட்டில் மேலும் 40 கொ​ரோனா மரணங்கள் நேற்று (08) உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மரணங்கள் அனைத்தும் நேற்று முன்தினம் பதிவாகியவை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்